2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா


யாழ். கே.கே.எஸ் வீதியில் முட்டாஸ் கடை சந்திக்கருகில் சனிக்கிழமை (27) மதியம் இடம்பெற்ற விபத்தில் ,3மாதங்களுக்கு முன்னர் திருமணமான   கோபிநாத் (வயது 30) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில்  சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராயைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.  இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியராவார்.

டிப்பர் வாகன சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தாம் தேடி வருவதாகவும் உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .