2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இன்று இரவு முதல் ரயில் சேவை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 13 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத பயணம் இன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு தபால் புகையிரதமாக ஆரம்பிக்கப்படும் என யாழ். புகையிரத நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், புகையிரத பயணத்துக்கான முற்பதிவுகளை இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை முதல் மேற்கொள்ள முடியும் எனவும் புகையிரத நிலைய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இன்ரசிற்றி (கடுகதி), குளிரூட்டப்பட்ட புகையிரதம் மற்றும் யாழ்தேவி புகையிரதம் என்பன தமது சேவைகளை நாளை புதன்கிழமை (15) முதல் ஆரம்பிக்கின்றது.

அதுவரையில் பளையிலிருந்து பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும் என புகையிரத நிலையத்தினர் மேலும் தெரிவித்தனர்.

யாழ்தேவி புகையிரத சேவையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை (13) ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .