2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தின் ஆற்றங்கரையோர பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி அடையாள அட்டைகள் மற்றும் வாகனங்களின் காப்புறுதி, வரிப்பத்திரங்கள் என்பன இராணுவத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் ஒதுக்கு புறமாகவுள்ள குகைபோன்ற இடத்தில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளன.

இவை மீட்கப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், பொலிஸார் வந்ததும் அவர்களிடம் இவற்றை ஒப்படைக்கவுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

தங்களுக்கு இது தொடர்பில் தகவல் கிடைத்ததாக வல்வெட்டித்துறை பொலிஸாரும் உறுதிப்படுத்தினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .