2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தமிழர்களுக்கான தீர்வு, மாகாண சபை அல்ல: சி.வி.கே

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழ் மக்களுக்கான தீர்வு, மாகாண சபை என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. தேர்தல் பிரசார காலத்திலும் சரி, தற்போதும் சரி அவ்வாறு நாம் கூறவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட கிளையின் மாவட்ட மாநாடு, நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவைத்தலைவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அதிகாரம் என்பது தானாக வராது. அது உருவாக்கப்பட வேண்டும். அதிகாரம் இல்லை என்று சொல்பவர்கள் அதை பெற முயற்சிக்க வேண்டும்' என்று கூறினார்.

'காணி அதிகாரம் மத்திய அரசுக்கே சொந்தம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது எமக்கு தெரியும். ஆனால், 13ஆம் திருத்தத்தில் மாகாண சபைக்கு காணி அதிகாரம் உண்டு என கூறுகிறது. வடமாகாண சபையால் எவ்வித பிரயோசனமும் இல்லையென எள்ளி நகையாடுபவர்கள் இருக்கின்றனர்.

வடமாகாண சபை 140 பிரேரணைகளை நிறைவேற்றி இருக்கிறது. வடமாகாணத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு மீள்குடியேற்றங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் வடமாகாண சபை மேற்கொண்டு வருவதாக' அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .