2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காணாமற்போன பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

George   / 2014 நவம்பர் 17 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, செல்வநாயகம் கபிலன்

காணாமற்போன புத்தூர் நவக்கிரியை சேர்ந்த பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை(16) இரவு அதே பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் நவக்கிரியை சேர்ந்த சின்னையா மகாதேவி (வயது 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

கணவனை இழந்த மேற்படி பெண் சகோதரர் ஒருவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை(16) காலையில் காணாமற்போயிருந்தார். சகோதரர் பல இடங்களிலும் தேடியும் காணாமற்போன பெண் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வயல் கிணறு ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவாவுடன் சென்று சடலத்தை மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .