2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்றவர் கைது

Gavitha   / 2014 நவம்பர் 26 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபரை, நெல்லியடி இராஜகிராமம் பகுதியில் வைத்து புதன்கிழமை (26) காலை கைது செய்ததாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

பண மோசடி, சீட்டு மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த துன்னாலை சக்குசம்;பாட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (25) காலையில் துன்னாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபரை, இரவு மலசலகூடத்துக்கு அழைத்து செல்லும் போது, மதிலில் பாய்ந்து சந்தேகநபர் தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபர் புதன்கிழமை (26) மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை பருத்தித்தித்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை (26) ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .