2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க.வில் இணைகிறார் சேகு இஸ்ஸதீன்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார். அத்துடன் அவர், அக்கட்சியின் பிரதான பேச்சாளராக செயற்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் 1996ஆம் ஆண்டில் ஐ.தே.க எம்.பி.யாக சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், சந்திரிகா அரசாங்கத்திலும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும் தேசியப் பட்டியல் எம்.பி.யாக நியமிக்கப்பட்ட இவர், பிரதியமைச்சர், அமைச்சராகவும் பணியாற்றினார்.

வட கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் பதவி வகித்த காலத்தில் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டார். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளாராகவும் சேகு இஸ்ஸதீன் பணியாற்றியிருந்தார்.

இறக்காமம், மதினாபுரத்தில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன் பின்னர் மேற்படி முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளை அடைவதற்கான பாரிய தடைக்கல்லாக மட்டுமன்றி நாட்டை சர்வதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லவும் வழிவகுக்குமென மர்ஹூம் அஸ்ரப்பின் காலத்தில் இருந்தே சுட்டிக்காட்டி வந்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .