2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பெண்ணின் கூந்தலை கத்தரித்தவருக்கு பிணை

Gavitha   / 2014 நவம்பர் 29 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு ஊறணி பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அப் பெண்ணின் கூந்தலை கத்தரித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான கெருடாவில் பகுதியைச் சோந்த 24 வயதுடைய சந்தேக நபரை 1இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அ.க.நடராஜா வெள்ளிக்கிழமை (28) அனுமதித்தார். அத்துடன் சந்தேக நபர் தொடர்பான வழக்கை எதிர்வரும் டிசெம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் செம்டெம்பர் மாதம் (23) திகதி அத்துமீறி நுழைந்த சிலர் பெண்ணை பலவந்தமாக பிடித்து, கூந்தலை கத்தரித்துள்ளனர்.

பெண்ணன் கூந்தலை கத்தரிக்கும் போது ஏற்பட்ட இழுபறியில், அப் பெண்ணின் 13 வயது மகளும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.
இது தொடர்பில் அப்பெண் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .