2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொம்மைவெளி மக்கள் வீதிமறியல் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2014 நவம்பர் 29 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்.நகரை அண்டியுள்ள பொம்மைவெளி பிரதேச மக்கள் வெள்ளப் பாதிப்பில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி கொட்டும் மழைக்கும் மத்தியில் சனிக்கிழமை (29) வீதிமறியல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

யாழ்.நகரையும் காரைநகர் பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான வீதியை பொம்மைவெளி சந்தியில் மறித்து சனிக்கிழமை (29) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டம் காரணமாக வீதியில் போக்குவரத்து தடைப்பட்டதால், பொலிஸார் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் மூவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கும் பொருட்டு அவரது கட்சி அலுவலகத்துக்கு சென்றவேளை, அவரை சந்திக்க முடியவில்லை எனவும் தாம் சனிக்கிழமை (29) மாலை அவ்விடத்துக்கு வருகை தருவதாக கூறியதாக ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக எமது பிரதேசம் முழுவதும் வெள்ள காடாக காணப்படுகின்றது. ஒவ்வொரு மழைக்கும் நாம் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

இப்பிரதேசத்தில் கடந்த 18 வருடகாலமாக வசித்து வருகின்றோம். இந்த காணி தனியார்களுக்கு சொந்தமான காணி. இதனால் எமக்கு வீட்டு திட்டங்கள் கூட கிடைக்கவில்லை.

அதனால் எமக்கான நிரந்தர காணிகளை பெற்று தர கோரியும் நிரந்தர வீட்டு வசதிகளை ஏற்படுத்தி தர கோரியுமே நாம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .