2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வலி. கல்வி வலயத்துக்கு இடவசதி போதாது: கல்வி பணிப்பாளர்

Thipaan   / 2014 நவம்பர் 30 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


யாழ். வலிகாமம் கல்வி வலயத்தின் கடமைகளை மேற்கொள்வதற்கு, கல்வி வலய கட்டடத்தொகுதியில் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதாக வலிகாமம் கல்வி வலய கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரராசா, சனிக்கிழமை (29) தெரிவித்தார்.

வலிகாமம் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், வலிகாமம் கல்வி வலயத்தில் சாதனைகள் நிகழ்த்திய அதிபர்கள் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

வலிகாமம் கல்வி வலயம் அமைந்துள்ள கட்;டடத்தொகுதியிலேயே வடமாகாண சபையின் கல்வி திணைக்களமும் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் வலிகாமம் கல்வி வலயத்துக்கு போதிய இடவசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பில் இங்கு அமர்ந்திருக்கும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

எமது கல்வி வலயம் இலங்கையில் அனைத்து பாகத்தினரும் திரும்பி பார்க்கும் வகையில் விளையாட்டுத்துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் படைத்து வருகின்றது என கல்விப்பணிப்பாளர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்துகொண்ட கே.என்.டக்ளஸ் தேவானந்தா, கல்விக்காக  மகத்தான சேவைகளை ஆற்றி வருவதை பாராட்டி, வலய கல்விப் பணிப்பாளர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .