2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வீட்டில் கொள்ளையடிக்க முற்பட்டவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 நவம்பர் 30 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.கல்வியங்காட்டு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முற்பட்ட இரண்டு சந்தேகநபர்களை சனிக்கிழமை (29) மாலை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில்,

வீட்டிலிருந்தவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கொழும்புக்கு பணியொன்றின் நிமித்தம் சென்றிருந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை (29) மாலை வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பூட்டியிருந்த வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்பதை உணர்ந்த அயலவர்கள் மேலும் சிலரது உதவியுடன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டிலிருந்த பொருட்களை மூவர் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, கொள்ளையர்களில் இருவரை அயவலர்கள் மடக்கி பிடித்த போதும், ஒருவர் தப்பித்து ஓடிவிட்டார். பிடிப்பட்ட சந்தேகநபர்களை அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சந்கேதநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், அவர்கள் ஏற்கனவே பல வீடுகளில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்தது. சந்கேதநபர்களிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .