2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வெளிமாவட்ட அதிபர், ஆசிரியர்கள் சிறந்த சேவையாற்றுகின்றனர்: கல்விப்பணிப்பாளர் முருகவேள்

Thipaan   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றி வரும் வெளிமாவட்டங்களை சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் நிறைந்த சேவையை வழங்கி வருகின்றனர் என கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் க.முருகவேள், திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

கிளிநொச்சி வேரவில் இந்து மகா வித்தியாலயத்தில் நூற்றாண்டு விழா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி கல்வி வலயத்தில் எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 514 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஏனெனில், கூடுதலான ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளனர்.

கிளிநொச்சி வலயத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகின்ற அதிபர், ஆசிரியர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது நிறைவான சேவையை வழங்கி வருகின்றனர். எதிர்காலத்திலும் இவர்களது பணிகள் மிகவும் சிறப்பாக அமையவேண்டும் என முருகவேள் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .