2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கைவிடப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டி மீட்பு

Thipaan   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன்


யாழ். அச்சுவேலி பத்தமேனி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியொன்று திங்கட்கிழமை (01) இரவு மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு.வி.ஜெயதிலக, செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.

விபத்துக்குள்ளாகி சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்ட முச்சக்கரவண்டியை, இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை என்பதால், திருடப்பட்ட முச்சக்கரவண்டியாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக அவர் தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவருடை முச்சக்கரவண்டியென கண்டறியப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொறுப்பதிகாரி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .