2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாணத்தில் முதலாவது பூங்கனியியல் தாய் தாவர பண்ணை

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டையில் பூங்கனியியல் தாய் தாவர பண்ணை அமைப்பதற்குரிய ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பண்ணை அமைக்கப்பட்டு வருகின்றது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து முதலாம் கட்டமாக 7 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு தெரிவு செய்யப்பட்ட தாய் தாவரங்களை (பழமரக்கன்றுகள்) பேணிக்காத்தல், புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்துதல், கன்றுகளை விநியோகித்தல், அத்துடன் ஒட்டுமுறை பண்ணையாளர்களுக்கு மூலப்பொருட்களை வழங்குதல் போன்ற நோக்கத்தில் இந்த பண்ணை அமைக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த பண்ணை சுற்றுலா பயணிகளை கவருவதற்கும் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், திணைக்களங்கள் ஆகியவற்றுக்கு பயன்தரும் வகையில் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .