2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் சிறுவர், மகளிர் விவகார பொலிஸ் நிலையம்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 04 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் தொடர்பான பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கத்தால் புதன்கிழமை (03) நாட்டப்பட்டது.

இந்த கட்டிடம் அமைப்பதற்கு சிறுவர் மற்றும் விவகார அமைச்சு 5 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

இதன் கட்டிட பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கும் அதேவேளை எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.எம்.விமலசேன, பிரதேச செயலாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .