2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சொந்த இடங்களில் குடியமர்த்துவதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே தமிழ் மக்கள் ஆதரவு: சுரேஸ்

George   / 2014 டிசெம்பர் 06 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

தமிழ் மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவேன், அவர்களின் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவேன் என்று கூறும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு தமிழ் மக்கள் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 25 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுடன் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள், மருதனார் மடம் விவசாய பயிற்சி கல்லூரி மண்டபத்தில கலந்துரையாடல் நடத்திபோது  அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தடைப்பட்டிருப்பதற்கு இராணுவம் அப்பகுதியில் குடியிருப்பதே காரணம் என்பதற்கு அதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றது.

இது பற்றி பல போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்த போதும், எவ்வித பயன்களும் இதுவரையில் கிட்டவில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து எங்கள் உரிமைக்காக போராடுவோம்.

ஏனைய மாகாணங்களை விட வடக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள அதேவேளை, அவர்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வலி. வடக்கு மக்களை வலளாய் பகுதியில் குடியமர்த்த போவதாக அரசாங்கம் கூறியது.

ஆனால், அங்கு இருப்பது அரசாங்கத்தின் காணிகள் இல்லை. அவை தனியாருடைய காணிகள். ஒருவருக்கு உரித்தாக காணிகளில் வேறொருவரை இருத்துவது அடாவடித்தனமான செயல்.

மயிலிட்டி பகுதியில் வாழ்ந்த மக்களை தெல்லிப்பழையில் குடியமர்த்தினால், அவர்கள் எங்கு சென்று மீன்பிடிப்பார்கள்?.

ஏனெனில், மயிலிட்டி மக்களின் வாழ்வாதார தொழில் மீன்பிடி. இவ்வாறு மக்களை மாற்று இடங்களில் குடியமர்த்துவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகள் தேவையெனில் தமிழ் மக்களை சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்துகின்றேன் என்று சொல்லுபவருக்கே எமது வாக்குகளை வழங்குவோம் என மக்கள் கூறவேண்டும்.

மக்கள் சோர்ந்து விடாமல் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என சுரேஸ் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .