2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஏற்று நீர்ப்பாசன திட்டம் முன்மொழிவு

George   / 2014 டிசெம்பர் 08 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டம், புதுமுறிப்பு குளத்தின் கீழுள்ள பகுதிகளிலுள்ள மேட்டு நிலச்செய்கைகளை மேம்படுத்துவதற்காக, ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை மேற்கொள்வதற்கான திட்டம், வடமாகாண சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை, திங்கட்கிழமை (08) தெரிவித்தார்.

கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள புதுமுறிப்பு குளத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் நீர் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டதையடுத்து, அதன் கீழுள்ள 985 ஏக்கர் நிலப்பரப்பில் 328 விவசாயிகள் நெற்செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்தும், குளத்தின் கீழ் மேட்டு நில செய்கையில் ஈடுபடும் 485 விவசாயிகள், ஏற்று நீர்ப்பாசனம் இன்மையால் மழையை நம்பி மட்டும் மேட்டு நிலச்செய்கையை மேற்கொண்டு வருகின்றனர். மற்றைய காலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர்.

புதுமுறிப்பு குளத்தில் ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என வடமாகாண சபையில் திட்ட முன்மொழிவு கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் கேட்டபொழுது,

ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை மேற்கொள்ள பெருமளவு நிதி தேவை. உடனடியாக அந்நிதியை ஒதுக்கி திட்டத்துக்கான பணிகளை முன்னெடுக்க முடியாது. திட்டம் தொடர்பில் ஆராய்கின்றோம். நிதியுதவி கிடைக்கப்பெற்றதும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .