2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மகஜர்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 12 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள், சொந்த இடங்களில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு கோரிக்கை முன்வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்றை இந்த வாரம் நேரடியாக அனுப்பி வைக்கவுள்ளதாக அப்பகுதி 'மக்கள் அமைப்பு' தெரிவித்தது.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த கிளிநொச்சி மாவட்ட மக்களை 2009ஆம் ஆண்டு முதல் மீண்டும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இதுவரையில் தாங்கள் மீள்குடியேற்றப்படவில்லை எனவும், வெடிபொருட்கள் இருப்பதால் அதனை அகற்றிய பின் மீள்குடியேற்றம் செய்வதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளது. எனினும் தங்களுக்கு சொந்தமான காணிகள் தற்போது இராணுவத்தின் தேவைக்காக சுவிகரிக்கப்படவுள்ளது.

இதனால், 52 குடும்பங்கள் சொந்த காணிகளை இழக்கவேண்டிய நிலையில் இருப்பதாகவும், தங்களுடைய சொந்த காணிகளில் தங்களை மீள்குடியமர்த்த கோரி மகஜர் அனுப்பவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

தற்போது, உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளில் வசித்து வரும் தாங்கள் முன்னரும் ஒருமுறை ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பியிருந்ததாகவும் கூறினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .