2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 12 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வடமாகாண மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் கைதடி நவீல்ட் பாடசாலையில் வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.

வடமாகாணத்திலுள்ள 33 பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து சிறந்த திறமைகள் கொண்ட தலா ஒவ்வொரு மாற்றுத்திறனாளி தெரிவு செய்யப்பட்டு சிறப்பு பரிசில் வழங்கப்பட்டது.

கடந்த நவம்பர் 25ஆம் திகதி நவீல்ட் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கப்பட்டன.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் ஒழுங்குசெய்த கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.  இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் கே.நந்தகுமார் கலந்துகொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .