2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பட்டதாரி கைது

Thipaan   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமையால் திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 25 வயதுடைய விஞ்ஞானமானி பட்டம் பெற்ற ஒருவரை கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் சனிக்கிழமை (13) தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2½  பவுண் நகைகள் திருடியமை மற்றும் அண்மையில் பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற பஸ்ஸில் கல்வியங்காட்டு பகுதியில் வைத்து 2 பவுண் தங்கச்சங்கிலி அறுத்தமை ஆகிய சம்பவங்களில் சந்தேக நபருக்கு தொடர்பு உள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேற்படி நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், தான் ஒரு விஞ்ஞானமானி பட்டதாரி என்றும் பட்டம் பெற்றும் இதுவரை உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமையாலேயே திருடியதாகவும்  தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .