2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சிறுவனின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

George   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்ப்பாணம் நுணாவில் மத்தி பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (14) காலையில் மீட்கப்பட்ட 8 வயது சிறுவனின் சடலத்தை சிறுவனின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும்படி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை, சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனையில் சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதேயிடத்தை சேர்ந்தவரும் சாவகச்சேரி இந்து கல்லூரியில் தரம் 3இல் கல்விகற்று வருபவருமான இராஜகோபால் ஆகாஷ் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

கூலி வேலை செய்யும் சிறுவனின் பெற்றோர், சனிக்கிழமை (13) காலையில் சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் சிறுவனை காணவில்லை. எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் கிணற்றடிக்கும் சென்று பார்த்த போது, கிணற்றுக்குள் சிறுவன் சடலமாக மிதந்துள்ளான்.

சாவகச்சேரி பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

அண்மையில் பெய்த மழை காரணமாக யாழ். மாவட்டத்திலுள்ள கிணறுகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதுடன், சிறுவன் கிணற்றடியில் குளிக்க சென்றவேளை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .