2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஐந்து சந்தியில் குழு மோதல்; மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்

யாழ். ஐந்து சந்திப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இடம்பெற்ற குழு மோதலில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில்,  யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கடையொன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன்,  மோட்டார் சைக்கிளொன்றும் மூன்று சைக்கிள்களும்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
தீக்கிரையாக்கப்பட்ட  கடையில் ஏற்பட்ட தகராறு குழு மோதலாக மாறியதாகவும் பொலிஸார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து,   பெருமளவான  பொலிஸார் அவ்விடத்தில் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டினுள்  கொண்டுவந்ததாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .