2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நோயாளர்களுக்கு உதவி தொகைகள்

George   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கைதடி மக்கள் நலன்பேணும் நட்புறவு கழகத்தின் டென்மார்க் கிளையின் நிதியுதவியில் கைதடியை சேர்ந்த வறிய நோயாளர்கள் நால்வருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகைகள் ஞாயிற்றுக்கிழமை (14) வழங்கப்பட்டுள்ளன.

கைதடி வடக்கு செல்வா சனசமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் கழகத்தின் உபதலைவர் வீ.சின்னத்தம்பி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து, இந்த உதவி தொகைகள் வழங்கப்பட்டன.

இருதய நோயாளர்கள் இருவருக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட இருவருக்கும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தின் மூத்த உறுப்பினரும், ஓய்வுநிலை அதிபருமாகிய லயன் ப.செல்லத்துரை, மக்கள் வங்கியின் பரந்தன் கிளையின் முகாமையாளர் க.சிறிதரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .