2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பொலிஸ் நடமாடும்; சேவைகள்

Gavitha   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

யாழ்ப்பாணம் முஸ்லீம் வீதியில் அமைந்துள்ள பொலிஸ் நடமாடும் நிலையத்தால் இரத்ததான நிகழ்வு மற்றும் பிரதேச செயலக பதிவு நடவடிக்கைகள் என்பன எதிர்வரும் 18 மற்றும் 20ஆம் திகதிகளில் நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 18ஆம் திகதி இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், இரத்தங்களை யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் சேகரித்து செல்லவுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி பிறப்பு, இறப்பு, தேசிய அடையாளஅட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதில் ஜே – 84, 85, 86, 87 ஆகிய கிராமஅலுவலர் பிரிவு மக்கள் பயன்பெறமுடியும் என பொலிஸார் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .