2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பளையில் அபிவிருத்தி நடவடிக்கைகள்

George   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபை உறுப்பினர் அரியரட்ணம் பசுபதியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் பிரிவில் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரதேசத்திலுள்ள 8 வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களின் சுயதொழில் உதவிக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனைக்கொண்டு அம்மக்கள் சுயதொழில் வாய்ப்பாக கால்நடை வளர்ப்பை மேற்கொண்டதுடன், மிகுதியை தங்கள் வீடு புனரமைப்புக்கும் பயன்படுத்தினார்கள்.

தம்பகாமம் வீதி புனரமைப்புக்கு 5 இலட்சம் ரூபாயும், அறநெறி பாடசாலை புனரமைப்புக்கு 3 இலட்சம் ரூபாயும், இரட்டைக்கேணி அம்மன் ஆலய புனரமைப்புக்கு 4 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன.

பிரதேசத்திலுள்ள ஐந்து விளையாட்டுக்கழங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு விளையாட்டுக்கழகத்துக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பிரதேச செயலகத்தின் கலாச்சார விழாவில், பிரதேச கலைஞர்களை கௌரவிப்பதற்காக 1 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .