2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொலித்தீன் மிளகாய் செய்கை வெற்றியளித்தது

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், பொலித்தீன் பைகளில் அடைத்து மிளகாய் செய்கை செய்யும் நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அ.செல்வராஜா திங்கட்கிழமை (15) தெரிவித்தார்.

வரட்சியான காலங்களில் வளரக்கூடிய வகையில் பயிர்ச்செய்கைகளை செய்கை செய்வதில் விவசாய பணிமனை அக்கறைகொண்டு செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில், பொலித்தீன் பைகளில் மிளகாய் செடிகளை அடைத்து, குறைந்தளவு நீரின் மூலம் மிளகாய் செய்கை செய்யும் நடவடிக்கைகள் கோணாவில், புன்னைநீராவி, கிளிநொச்சி மேற்கு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன.

180 பயனாளிகளுக்கு விதை மிளகாய்கள் வழங்கப்பட்டு இந்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு, அது தற்போது வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .