2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

திருட்டுத்தனமாக பனைமரம் தறிக்க முற்பட்டவர்கள் கைது

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். கொடிகாமம், பாலாவி பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து திருட்டுத்தனமாக பனைமரங்களை தறிக்க முற்பட்டதாகக் கூறப்படும்  மூன்று பேரை ஞாயிற்றுக்கிழமை (14) இரவு கைதுசெய்ததாக கொடிகாமம் பொலிஸார் திங்கட்கிழமை (15) தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து  உழவு இயந்திரம், பெக்கோ வாகனம் ஆகியவற்றையும் கைப்பற்றியதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு சென்றபோது, பனைமரங்களை தறிக்க முற்பட்ட 07 பேரில் 04 பேர்  தப்பி ஓடியுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .