2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொள்ளை சந்தேகநபர்களுக்கு பிணை

George   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட 4 சந்தேகநபர்களையும் தலா 30 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், வியாழக்கிழமை(09) அனுமதியளித்தார்.

சந்தேகநபர்கள், பிரதி சனிக்கிழமை தோறும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என நீதவான் உத்தரவிட்டதுடன், இது தொடர்பான வழக்கை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

வரணி பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற 4 பேர் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி பொதுமக்களால் பிடிக்கப்பட்டு, கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தி வாகனமும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள், சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். வழக்கு வியாழக்கிழமை(09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தங்களுக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணியூடாக மன்றில் கோரியதையடுத்து நீதவான் பிணை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X