2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமாகாண சபை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு சி.வி.க்கு கடிதம்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அது சார்ந்த அமைச்சுக்களுக்கும் திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், அமைச்சுக்கள் திணைக்களங்கள் அதற்குரிய பதிலை வழங்காதிருப்பது தொடர்பில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வெள்ளிக்கிழமை (10) கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'கடந்த 7ஆம் திகதி வடமாகாண சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டதுக்கமைய வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்று, ஒரு வார காலத்துக்குள் பதிலை வழங்கப் பணிக்கலாம்.

தீர்மானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றிய விடயங்களை உள்ளடக்கிய பதிலை அளிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் அதனைக் கோரிப் பெற்றுக்கொள்ளலாம்.

இது தொடர்பாக ஒரு ஒழுங்குமுறையை பின்பற்றுமாறு அமைச்சின் செயலாளர்களையும், திணைக்கள தலைவர்களையும் பணிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
 
பொதுமக்களது கடிதங்களுக்கு பதிலளிக்க கால அட்டவணையாக 7 நாட்கள் வழங்கப்பட்டு, அந்த நியமம் முழுமையாக பின்பற்றுவது உறுதி செய்யப்படவேண்டும்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பிரதிகள் வடமாகாண அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X