2025 ஜூலை 16, புதன்கிழமை

வீடு உடைத்து திருடியவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வீடொன்றை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒரு வருடத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க யாழ் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

யாழ். மணியம் தோட்ட பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு, அங்கிருந்த 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் கடந்த 2014ஆம் ஆண்டு திருடப்பட்டது.

இது தொடர்பில் உரிமையாளர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குருநகர் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை கடந்த 14ஆம் திகதி கைது செய்தனர்.

திருடிய இலத்திரனியல் பொருட்களில் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X