2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வான்களை துப்பரவு செய்து தருமாறு வளலாய் மக்கள் கோரிக்கை

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வளலாய் கடற்கரை, கற்கள் மண்டி காணப்படுவதனால் படகுகளில் செல்ல முடியாது கட்டுமரங்களிலேயே தாம் கடற்றொழிலுக்கு செல்லவதாகவும் இதனால் பல சிரமங்களை எதிர்நோக்குவதால் வான்களை துப்பரவு செய்து தந்து தாம் படகுகளில் தொழிலுக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளலாய் ஜேஃ284 கிராம சேவையாளர் பிரிவில் 232 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியேற கடந்த மாதம் 13ஆம் திகதி அனுமதிக்கப்பட்டது.

அதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீள்குடியேறி வருகின்றார்கள். மீள் குடியேறியவர்கள் தாம் கடற்றொழிலுக்கு வளலாய் கடலில் இருந்து செல்ல முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாம் தற்போது இப்பகுதியில் மீள் குடியேறி உள்ளோம். ஆனால் கடந்த 25 வருடகாலமாக இப்பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு செல்லாமையால் நாம் வான்கள் மிக மோசமாக கற்கள் மண்டி காணப்படுகின்றது.

இதனால் எமது படகுகளை கடலுக்குள் இறக்க முடியாத நிலை உள்ளது. நாம் தற்போது கட்டு மரங்களை பயன்படுத்தியே தொழில் ஈடுபடுகின்றோம்.

எனவே இந்த வான்களை துப்பரவு செய்து தந்தால் நாம் படகுளில் தொழிலுக்கு செல்ல முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .