2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

George   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்குப் பகுதியில் 15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 22 வயது இளைஞனை சனிக்கிழமை(18) கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். 

சிறுமி, வீட்டில் தனிமையில் இருந்தபோது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அதேயிடத்தைச் சேர்ந்த சந்தேகநபர், சிறுமியை பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். 

இது தொடர்பில் சிறுமி, தனது பெற்றோர்களிடம் தெரியப்படுத்தியதையடுத்து, பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .