Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் தரித்து நின்ற பஸ் ஒன்றில் இருந்து பெருமளவான மதுபான போத்தல்களை சனிக்கிழமை (18) கைப்பற்றியதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
750 மில்லிலீற்றர் கொள்ளவுடைய 40 மதுபான போத்தல்கள் மற்றும் 40 டின்பியர் என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இந்த மதுபானங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை செல்லும் பஸ்ஸில்; இருந்து மீட்கப்பட்டுள்ளன.
பஸ் நடத்துனர், வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் இவற்றை மீட்டனர்.
இது தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
37 minute ago