2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்தவருக்கு அபராதம்

George   / 2015 ஏப்ரல் 20 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பளைப் பகுதியில் கசிப்பு காச்சியவருக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், திங்கட்கிழமை (20) உத்தரவிட்டார்.

கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட நபரை, ஞாயிற்றுக்கிழமை (19) பளைப் பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லீற்றர் கசிப்பு, பெருமளவு கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போது, குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

கசிப்பு வைத்திருந்தமைக்கு 1 இலட்சத்து 25,000 ரூபாயும் கோடா வைத்திருந்தமைக்கு 1 இலட்சம் ரூபாயும் கசிப்பு உற்பத்தி செய்தமைக்கு 1 இலட்சத்து 25,000 ரூபாயும் நீதவான் அபராதமாக விதித்தார்.

இதேவேளை, பளை கோரைக்கான் பகுதியிலிருந்து அனுமதியின்றி யாழ்ப்பாணத்துக்கு மணல் ஏற்றிச் சென்றவருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்;. அத்துடன், மணலையும் பறிமுதல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

பளைப் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்ட நபர், திங்கட்கிழமை (20) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .