Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்திலுள்ள வியாபார நிலையங்களில் பயன்படுத்தும் நிறுவை அலகுகளுக்கான (தராசு) முத்திரை பதிக்கும் நடமாடும் சேவை, திருநெல்வேலியிலுள்ள நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலகத்தில் இடம்பெறுவதாக யாழ். மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவை பிரிவின் பொறுப்பதிகாரி பி.ராஜேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், திங்கட்கிழமை (20) முதல் ஆரம்பமான இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவை திணைக்களத்தின் முத்திரைகளைப் பதித்து கொள்ளாத நிறுவை அலகுகளை (தராசு) பயன்படுத்தும் வியாபார நிலையத்தினர், நடமாடும் சேவைக்கு சென்று வியாபார நிலையங்களின் பெயர்களை உறுதிப்படுத்தி தராசுகளுக்கான முத்திரைகளை பதித்துக் கொள்ளலாம்.
அளவீட்டு அலகுகள் நியமங்கள் பிரிவு திணைக்களத்தின் முத்திரைகளைப் பதித்துக் கொள்ளாத நிறுவை அலகுகளை பயன்படுத்தி வியாபாரம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
43 minute ago
45 minute ago