Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 21 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கரைச்சிப் பிரதேச சபையின் நிர்வாகத்தை சரியான முறையில் நடத்தாதவர்கள் எதிர்காலத்தில் கரைச்சி பிரதேச சபை, நகர சபையாக மாற்றப்பட்டால் அதனை எவ்வாறு நடத்துவார்கள் என கரைச்சிப் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுப்பையா மனோகரன் கேள்வியெழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழுள்ள கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் உபதவிசாளர் வடிவேல் நகுலேஸ்வரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.
இதன்போது, கரைச்சிப் பிரதேச சபை, நகர சபையாக மாற்றப்படும் போது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள், பிரதேச சபையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
பிரதேச சபைத் தேர்தலின் போது, 30 அம்சங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபையை கைப்பற்றியது. எனினும் அதில் ஒன்றையேனும் இதுவரையில் நிறைவேற்றவில்லை. கட்சியின் கொள்கைக்கமைய மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்குடனே வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன.
பெரியார்கள் சிலைகள் அமைத்தல், பிரதேச சபையின் முக்கிய வீதிகள் புனரமைத்தல், பிரதேச சபையுடன் தொடர்புபட்ட வீதிகளுக்கு பெயர்பலகை சூட்டுதல் எவற்றையும் இந்த நிர்வாகம் செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.
கரைச்சிப் பிரதேச சபை நகர சபையாக மாற்றப்படவுள்ளது. அத்துடன், கண்டாவளை பிரதேச சபை என்று புதிய பிரதேச சபை உருவாக்கப்பட்டு, அதனுடன் இணைந்து அக்கராயன் உப அலுவலகமும் செயற்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
30 minute ago
32 minute ago