Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
George / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.நேசமணி
சுழிபுரம் குடாக்கனை காளியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை(25) இடம்பெற்ற மிருகபலியிடலின்போது ஆறு ஆடுகள் மட்டுமே பலியிடப்பட்டன.
உரிய சட்டவிதிகள் முறையாக அமுல்படுத்தப்பட்டமையால் முன்னதாகவே அனுமதி பெறப்படாத பல ஆடுகள் வெட்டப்படாமல் திருப்பிக் கொண்டு செல்லப்பட்டன.
சுழிபுரம் குடாக்கனை காளியம்மன ஆலயத்தில் ஆடுகள் பலியிடுவதற்கு இந்த மாத ஆரம்பத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் சைவமகா சபை ஆகியன வட்டுக்கோட்டை பொலிஸாரின் ஊடாக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததை தொடர்ந்து வேள்வி தடுத்து நிறுத்தப்பட்டது.
மூன்று தவணைகளாக வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் உரிய சட்ட விதிகளை மீறாமல் வேள்வியை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்ட விதிகள் அமுல்படுத்தப்படுவதை பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.
குறிப்பாக, இறைச்சிக் கட்டளைச் சட்டம், மிருகவதை தடுப்புச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ஆகிய சட்டங்கள் மீறப்படக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளுக்கு இணங்க, இடம்பெற்ற வேள்வியில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்படி ஆலய நிர்வாகம் உரிய ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் பரிசோதிக்கப்பட்ட ஆடுகள் மாத்திரமே வெட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டன.
வெட்டப்பட்ட ஆடு அந்த இடத்தில் வைத்து தோல் உரிக்கப்பட்டு இறைச்சி சீல் வைக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டது.
ஆனால், எந்தவொரு ஆடும் ஆலயத்தில் வைத்து ஏலம் கூறி விற்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
சகல ஆடுகளுக்கும் உரிய சுகாதார விதிகள் பின்பற்றப்பட்டமையால் ஒரு ஆடு வெட்டுவதற்கு ஏறக்குறை ஒரு மணித்தியாலம் வரை சென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
35 minute ago
59 minute ago
1 hours ago