2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஆசிரிய கலாசாலை பரீட்சைகளில் சித்தியடையாதோருக்கான மீள்பரீட்சை

Thipaan   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.விஜயவாகன்

2011ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் நடைபெற்ற ஆசிரிய கலாசாலைப் பரீட்சைகளில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கான, மீள்பரீட்சை ஒன்றை இவ்வருடத்தில் நடத்துவதற்குப் பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையூடாக ஏற்கெனவே பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைய தவறியவர்கள், நூன சித்தி பெற்றவர்கள் ஆகியோர் மீள் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் பொருட்டு எதிர்வரும் 30க்கு முன்னர் கலாசாலை அதிபருடன் தொடர்பு கொள்ளுமாறு அதிபர் வீ.கருணலிங்கம் தெரிவித்தார்.

நூனசித்தி பெற்றவர்கள் சித்தியடையத் தவறிய பாடத்துக்கு மாத்திரம் தோற்றினால் போதுமானது. ஆனால், மூன்று அல்லது அதைவிடக் கூடுதலான பாடங்களில் நூன சித்தி பெற்றிருந்தால் எல்லாப் பாடங்களுக்கும் தோற்ற வேண்டும் என அதிபர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .