2025 ஜூலை 10, வியாழக்கிழமை

திருட்டு சந்தேகநபர்கள் மூவர் விளக்கமறியலில்

Princiya Dixci   / 2015 மே 03 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 03 சந்தேகநபர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், சனிக்கிழமை (02) உத்தரவிட்டார்.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சுன்னாகம் பகுதியில் பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்புடைய குப்பிழான், ஏழாலை மற்றும் மயிலங்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 03 சந்தேகநபர்கள், வெள்ளிக்கிழமை (01) இரவு கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 12 நீர் இறைக்கும் மோட்டார்கள், 02 அலைபேசிகள், தொலைக்காட்சிப் பெட்டி, சி.டி.பிளேயர், மின்சார அடுப்பு மற்றும் மிக்சி உள்ளிட்ட 04 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர்கள் திருடி விற்பனை செய்த சில பொருட்களும் மீட்கப்பட்டன.

பொலிஸ் நிலையத்திலுள்ள தமது பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காண முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .