2025 ஜூலை 10, வியாழக்கிழமை

தேசியம் நோக்கிய நகர்வில் ஊடகங்கள் பாரிய பணியை மேற்கொண்டன

Sudharshini   / 2015 மே 03 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது தேசியம் நோக்கிய நகர்வுகளில் கடந்த காலத்தில் ஊடகங்கள் மிகப்பாரிய பணியை மேற்கொண்டிருந்ததுடன் இன்றும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன என வலிகாமம் மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்தார்.

உலக பத்திரிகையாளர் சுதந்திரதினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (03) அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

நவீன ஜனநாயக நிலையில் ஜனநயகத்தின் தூண்களில் ஒன்றாகவே ஊடகம் அமைந்திருக்கின்றது. இந்த நாள் பத்திரிக்கை சுதந்திரத்தை பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனத்தின் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அமையத்தினால் சிறப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1993ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 3ஆம் நாள் பத்திரிக்கை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எமது இனத்தின் வரலாற்றில் பல இருண்ட யுகங்கள் பல அடக்குமுறைகள் இவற்றுக்கும் மேலாக,  எமது குரல்கள் ஒங்கி ஒலித்தபோதும் எமது உணர்வுகளை எடுத்துக்காட்ட முடியாத நிலையில், பல சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் சிறப்பாக செயற்பட்டு உலக அரங்கில் எமது உரிமைக் குரல் ஒலிக்க வழி ஏற்படுத்தின.

ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் ஓரு போராளியாகவே தொழிற்பட்டு செயற்பட்டனர். விடியலின் ஆரம்பங்கள் ஊடகவியலாளர்களின் பேனா முனைகளால் அலங்கரிக்கப்பட்டது. பல ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டன.

பேனா முனைகளால் விடுதலைக்கு உரமுட்டி இன்று எம்முடன் இல்லாத மறைந்த ஊடகவியலாளர்களை இந்த பொன்னான நாளில் தழிழ் உணர்வுகளால் பூசித்து, அவர்களின் நினைவாக ஒரு நினைவிடத்ததை உருவாக்க ஒன்றிணைவோம் என குறிப்பிட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .