2025 ஜூலை 09, புதன்கிழமை

பலாப்பழ சுளை சிக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

Gavitha   / 2015 மே 04 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பலாப்பழத்தின் சுளைச்சவ்வு தொண்டையில் சிக்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக பகுதியைச் சேர்ந்த எஸ்.தனுசன் (வயது 08) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 01ஆம் திகதி பலாப்பழம் உண்ட சிறுவன் சவ்வு சிக்கி மூச்சுத்திணறியதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .