2025 ஜூலை 09, புதன்கிழமை

வெசாக் தினத்தில் மதுபானம் விற்ற முதியவர் கைது

Thipaan   / 2015 மே 04 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன் 

யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள பழைய போத்தல் விற்பனை நிலையத்தில் மதுபானம் விற்பனை செய்த 60 வயதுடைய வயோதிபரை திங்கட்கிழமை (04) கைது செய்ததாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். 

வயோதிபரிடமிருந்து 180 மில்லிலீற்றர் கொள்ளவுடைய 310 மதுபானப் போத்தல்களைக் கைப்பற்றியதாக பொலிஸார் கூறினர். 

வயோதிபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .