Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 மே 06 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு, சுண்டிக்குளம், போக்கறுப்பு ஆகிய பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் பூபாலசிங்கம் சஞ்சீவன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை(05) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கூறுகையில், கட்டைக்காடு, சுண்டிக்குளம், போக்கறுப்பு பகுதியில் சட்டவிரோதன பனைமரம் தறிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சுண்டிக்குளத்தில் கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை அதிகரித்துள்ளது.
மருதங்கேணியில் உபபொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள போதும், பொலிஸார் அங்கு இருப்பதில்லை. அவர்கள் மீனவர்களின் வாடிகளில் தங்குகின்றனர். மருதங்கேணியின் நிர்வாகம் யாழ். மாவட்டத்துக்கும் பொலிஸ், நீதிமன்றம் கிளிநொச்சி மாவட்டத்துக்கும் இருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
மருதங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை எவ்வாறு பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்களோ அதுபோன்று மேற்படி குற்றச் செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க, சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலான முறைப்பாடுகளை பளைப் பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்க முடியும். மக்கள் இது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago