Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2015 மே 06 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இருக்கும் பலாலி இராணுவ முகாமின் நுளைவு வாசலுக்கு முன்பாக வசாவிளான் மக்கள் கற்பூரமேற்றி வைரவ கடவுளை வழிபட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (5) நடைபெற்றது.
வசாவிளான் பலாலி இராணுவக்குடியிருப்பு என்று பொறிக்கப்பட்ட வளைவில் இருந்து உள்நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்தினுள் வசாவிளான் ஞானவைரவர் ஆலயம் உள்ளது.
பெரிய வைரவர் ஆலயங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்ற இந்த ஆலயத்தில் மே மாதத்தில் வைரவர் மடை பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆலயம் உயர்பாதுகாப்பு வலயமாக இருப்பதால் மக்கள் ஆலயத்துக்கு சென்றுவரமுடியவில்லை.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்த ஆலயம் விடுவிக்கப்படும் என மக்கள் நினைத்திருந்தனர்.
அதுநிறைவேறாத நிலையில், மே மாத மடைத்திருவிழாவைக் கொண்டாடுவதற்கு முன்னோடியாக செவ்வாய்க்கிழமை (5) ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதற்கு 100 க்கும் மேற்பட்ட மக்கள் நுழைவாயிலுக்கு அருகில் திரண்டனர்.
மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரும் அங்கு சென்றனர்.
இராணுவமுகாம் நுழைவு வாசலில் கடமையில் இருந்த படையினரிடம், ஆலய வழிபாட்டுக்காக வந்திருக்கிறோம் என்பதை படை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனினும் உள்நுழைவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. அத்தோடு பொதுமக்களைச் சந்திப்பதற்கு நீண்டநேரமாகியும் படை அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை. இதனையடுத்து மக்கள் முகாம் வாசலுக்கு முன்பாக சிதறு தேங்காய் உடைத்து, கற்பூரம் கொழுத்தி வழிபட்டனர்.
முகாம் வாசலில் கற்பூர வழிபாட்டைச் செய்யவேண்டாம் என்று கடமையில் இருந்த இராணுவத்தினர் ஆரம்பத்தில் சொன்னபோதும், பொதுமக்கள் திரளாக வழிபட ஆரம்பித்ததும் விலகிச் சென்றுவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago