2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாணவி படுகொலை: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தபட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டதாக ஊர்காவற்துறை பொலிஸார், சனிக்கிழமை (16) தெரிவித்தனர்.

ஊர்காவற்துறை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை (14) கைது செய்யப்பட்ட நபர்கள் மூவரும் விசாரணையின் பின்னர் வெள்ளிக்கிழமை (15) மாலை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டிருந்தனர்.

அத்துடன் கைதான சந்தேக நபர்களின் ஆடைகளை பகுப்பாய்வுக்காக இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X