Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 மே 16 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெறவிருந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சனிக்கிழமை (16) தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்துக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருந்து இரு பொலிஸார் வந்திருந்தார்கள்.
அவர்கள், திங்கட்கிழமை (18) முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிருந்தமை தொடர்பில் எம்மிடம் விசாரித்தார்கள்.
அதற்கு நான், நாங்கள் முள்ளிவாய்க்காலில் அமைதியான முறையில் நினைவு சுடர் ஏற்றி, பிரார்த்தனை செய்து இறுதியில் சில பேச்சுக்களுடன் நிகழ்வை முடிவுக்கு கொண்டுவர உள்ளோம் என்றும் அந்த நிகழ்வில் எந்தவிதமான வன்செயலையோ வேறு எந்த தரப்புக்கும் எதிராக அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் செயற்பட போவதில்லை என்ற வாக்குறுதியினை தெளிவாக கொடுத்து இருந்தேன்.
வேறு தரப்பு எங்கள் மீது அச்சுறுத்தி தடை செய்வதற்கோ, எமக்கு எதிராக செயற்பட்டாலோ அதனை பொலிஸார் தடுக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தோம்.
அந்த இடத்தில் பொலிஸார் எமக்கு கூறியது என்னவெனில்,
தமிழத்; தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல் நிகழ்வை நடத்த உள்ள நாளில் இன்னொரு தரப்பு முல்லைத்தீவில் ஒரு நிகழ்வு ஒழுங்கை செய்து இருப்பதாகவும், அதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்படும் என தமக்கு புலனாய்வு தகவல் கிடைத்து இருந்ததால் தாம் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்று தடையுத்தரவை பெற்றுள்ளதாக தெரிவித்திருந்ததுடன் நீதிமன்ற தடையுத்தரவையும் எம்மிடம் தந்தார்கள்.
அதன் போது, இன்னுமொரு அமைப்பும் அன்றைய நாள் நிகழ்வு ஒன்றை நடாத்த உள்ளதாக தெரிவித்து இருக்கின்றீர்கள் அந்த அமைப்பின் நிகழ்வும் தடை செய்யப்பட்டு உள்ளதா? என நாம் கேட்டோம். அந்த கேள்விக்கு பொலிஸார் பதில் அளிக்கவில்லை.
எமக்கு தெரிந்தவரையில் முல்லைத்தீவு பொலிஸார் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு நாளை அனுஷ்ட்டிக்க எமது அமைப்பை மட்டும் தான் தடை செய்துள்ளனர். வேறு எந்த அமைப்புக்கும் இதுவரை தடை விதிக்கப்பட்டு உள்ளதாக எமக்கு தெரியவில்லை.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் நினைவேந்தல் நிகழ்வை திங்கட்கிழமை நடத்த நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தாலும் அதே நாள் நாம் வேறு ஒரு இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நிச்சயமாக நடாத்தியே தீருவோம் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago