Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2015 மே 18 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவி, வித்தியா சிவலோகநாதனின் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் ஐவரை ஞாயிற்றுக்கிழமை (17) மாலை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த ஊர்காவற்றுறை பொலிஸார் குறிகட்டுவான் உப பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
கைதானர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி குறிகட்டுவான் உப பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, வீதியை மறித்து டயர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தமையால், சந்தேகநபர்களை கடல்மார்க்கமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பாடசாலைக்கு சென்ற மேற்படி மாணவி கடந்த புதன்கிழமை (13) துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலையுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேலும் ஐவர் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து குறிகட்டுவான் பகுதியில் வைத்து மேற்படி ஐவரும் கைதுசெய்யப்பட்டனர். 31, 26, 23 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள், குறிகட்டுவான் உபபொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த பொலிஸார் அவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது, தகவலறிந்து அங்கு சென்ற பொதுமக்கள் குறிக்கட்டுவான் உபபொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேகநபர்களை தம்மிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உப பொலிஸ் நிலையம் மீதும் கல்வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதில் இரு பொலிஸாருக்கு சிறு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்ததால் அவ்விடத்துக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் கடற்படையினரும் வரவழைக்கப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
சந்தேக நபர்களை கடற்படையின் உதவியுடன் கடல் வழியகாக யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago