2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சாவல்கட்டு மீன்சந்தை புனரமைப்பு

Gavitha   / 2015 மே 18 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட சாவல்கட்டுப்  மீன்சந்தையை 1 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக பிரதேச சபைத் உபதவிசாளர் எஸ்.மகேந்திரன் திங்கட்கிழமை (18) தெரிவித்தார்.

பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படும் பிரபல்யமான சந்தைகளில் ஒன்றாக இந்தச் சந்தையுள்ளது. இந்தச் சந்தை சிறிய கட்டடத்தில் வசதிகள் குறைந்த நிலையில் இயங்கி வந்தது என்று இதன்போது அவர் கூறினார்.

இந்தச் சந்தையை அபிவிருத்தி செய்யுமாறு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பரமகுரு சபையில் கோரிக்கை முன்வைத்தார். இவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 1 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது என்ற அவர் தெரிவித்தார்.

இதற்கான அனுமதி சபை உறுப்பினர்களிடம் பெறப்பட்டு, புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தகாரர்களுக்கான முதற்கட்ட நிதி கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .