Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மே 19 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.தபேந்திரன்
வடமாகாண சமூக சேவை திணைக்களத்தால் வழங்கப்பட்ட சுயதொழில் உதவியில் சுயதொழில் மேற்கொண்ட 12 பேருக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கான நிதி சமூக சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வறிய நிலையிலுள்ள பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் முதற்கட்டமாக தலா 7,500 ரூபாய் உதவிகள் வழங்கப்பட்டு கால்நடை வளர்ப்பு, விவசாயம், சிறுகைத்தொழில் ஆகிய சுயதொழில் முயற்சிகளை பயனாளிகள் மேற்கொண்டனர்.
இவற்றை வெற்றிகரமாகச் செய்த 13 பேருக்கான இரண்டாம் கட்ட நிதியான தலா 7,500 ரூபாய் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 5 பேரும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 7 பேரும் இந்நிதியைப் பெறவுள்ளனர்.
இதனைவிட புதிய சுயதொழில் முயற்சியாளர்கள் இரண்டு பேருக்கான நிதியும் திணைக்களத்தால் அனுப்பப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago