2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழ். நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த 20 பேர் கைது

George   / 2015 மே 20 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் புதன்கிழமை(20) குழப்பம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் கைதான சந்தேகநபர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவதையடுத்து, அங்கு கூடியவர்கள் நீதிமன்றத்துக்கு கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியதுடன், பொலிஸாரின் பாதுகாப்பு வேலியையும் தாண்டி நீதிமன்றத்துக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

கல்வீச்சில் நீதிமன்ற கண்ணாடிகள் சேதமடைந்ததுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட 3 வாகனங்கள் சேதமடைந்தன. 

இதனையடுத்து, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசி குழப்பம் விளைவித்தவர்களைக் கலைத்தனர். அதன்பின்னரும் அங்கு நின்று குழப்பம் விளைவித்த சுமார் 20 பேர்   பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

எனினும், எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பது தொடர்பான விவரங்களை பொலிஸார் தெரிவிக்கவில்லை.  நீதிமன்றத்துக்கு நுழையும் சகல பாதைகளும் மூடப்பட்டு, பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .